டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த இறுதி போட்டியில் மதுரை அணி திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜெகதீசன் மட்டும் 51 ரன்கள் எடுத்தார். மதுரை அணி தரப்பில் தன்வார் 4 விக்கெட்டுக்களையும் லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்களளயும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த நிலையில் 118 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. இருப்பினும் அருண்கார்த்திக் மற்றும் சந்திரன் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 119 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. அருண்கார்த்திக் 75 ரன்களும் சந்திரன் 38 ரன்களும் எடுத்தனர். தொடர்நாயகன் மற்றும் ஆட்டநாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் அருண்கார்த்திக் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.