Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஹைடனைக் கோபமாக்கிய சேவாக் – மீண்டும் பேபிசிட்டர் சர்ச்சை !

ஹைடனைக் கோபமாக்கிய சேவாக் – மீண்டும் பேபிசிட்டர் சர்ச்சை !
, செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (16:17 IST)
விரைவில் நடக்க இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடரை விளம்பரப் படுத்துவதற்காக சேவாக் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விளம்பரப் படத்தால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா ஆஸ்திரேலியாத் தொடரின் போது டிரண்டிங்கில் இருந்த வார்த்தை வார்த்தை பேபிசிட்டர். இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பேட் செய்த ரிஷப் பண்ட்டை சீண்டும் விதமாக ஆஸியின் கேப்டன் டிம் பெய்ன் ‘நான் எனது மனைவியோடு சினிமாவுக்கு செல்ல வேண்டும். அதனால் எனது குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பேபிசிட்டராக வருகிறாயா ?’ எனக் கேட்டார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக பண்ட் டிம் பெய்னை ’தற்காலிகக் கேப்டனை யாராவது பார்த்ததுண்டா ?’ என பதிலடிக் கொடுத்தார்.

இந்த ஸ்லெட்ஜிங் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே அதை சமாளிக்கும் விதமாக ரிஷப் பண்ட் டிம் பெய்னின் குடும்பத்தை சந்தித்து சமாதானமாகினார். டிம் பெய்னின் மனைவி ரிஷப் பண்ட் தனது குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவேற்றி ’ரிஷப் பண்ட் ஒரு சிறந்த பேபி சிட்டர்’ என சான்றிதழும் கொடுத்திருந்தார். இதனையடுத்து அந்தப் பிரச்சனை அப்போது ஓய்ந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது ஆஸி அணி இந்தியா வந்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அந்தத் தொடரை விளம்பரப்படுத்தும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ள விளம்பரப்படத்தில் இந்தியக் கிரிக்கெட் வீரர் சேவாக் நடித்துள்ளார். இந்த விளம்பரப் படத்தை சுவாரசியாக  பரபரப்பாக பேசப்பட்ட பேபி சிட்டர் என்ற விஷ்யத்தைக் கையில் எடுத்துள்ளனர். இந்த விளம்பரத்தில் இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய வீரர்களை குழந்தைகளப் போல சித்தரித்துள்ளதாகவும், அவர்களை சேவாக் பேபி சிட்டராக இருந்து பார்த்துக்கொள்வது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விளம்பரத்தைக் கடுப்பான ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். அவரது டிவிட்டரில் ‘ ஒருபோதும் ஆஸி வீரர்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் சேவாக்… உலகக்கோப்பைக்குப் பின் யார் பேபிசிட்டராக இருக்கப் போகிறார்கள் எனப் பார்க்கலாம்’ எனத் தெரிவித்து அதில் சேவாக்கையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலையும் டேக் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல்... கம்பீர் கண்டனம்