இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்பவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட உள்ளது.
ஆஸ்திரேலிய பழங்குடி வீரர்களைக் கொண்ட அணி 1868 ஆம் ஆண்டு இங்கிலாந்து முதல்முறையாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்றது. அந்த அணிக்கு பழங்குடி வீரரான ஜானி முல்லாக் தலைமை தாங்கினார். இதையடுத்து அவரின் 150 ஆவது நினைவுதினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதையடுத்து அவரைக் கௌரவிக்கும் வகையில் இம்மாதம் 26 ஆம் தேதி நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு ஆஸ்திரேலிய பழங்குடி அணியின் புகைப்படம் பொறித்த பதக்கம் சிறப்புப் பரிசாக வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.