உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல்முறையாக தங்கம் வென்று இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனை செய்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் வீர சோப்ரா தங்கம் வென்றார்.
அவர் இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து சாதனை செய்தார். முதல் முறையாக தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
25 வயதான நீரஜ் சோப்ரா ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். அதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரஜ் சோப்ரா தங்கம் என்றதை எடுத்து அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது