Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் டெஸ்ட்டில் வென்ற வங்கதேசத்தை வச்சு செய்யும் நியூசிலாந்து!

முதல் டெஸ்ட்டில் வென்ற வங்கதேசத்தை வச்சு செய்யும் நியூசிலாந்து!
, திங்கள், 10 ஜனவரி 2022 (08:10 IST)
முதல் டெஸ்ட்டில் வென்ற வங்கதேசத்தை வச்சு செய்யும் நியூசிலாந்து!
நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் மிக அபாரமாக வென்ற நிலையில் தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை நியூசிலாந்து அணி வச்சு செய்துவருகிறது. 
 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் லாதம் 252 ரன்கள் எடுத்தார் என்பது கான்வே 109 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வங்கதேச அணியின் முதலாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் நிலையில் 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து விட்டது என்பதும் தற்போது 510 ரன்கள் அந்த அணி பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
முதல் போட்டியில் வென்ற வங்கதேச அணி திணறி வருவதைப் பார்க்கும்போது இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராடி டிரா செய்தது இங்கிலாந்து: தொடரை வென்ற ஆஸ்திரேலியா!