உலகம் முழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கிரிக்கெட் தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாய செய்து வருகிறார் ஆஸ்திரேலிய துணை கேப்டன்.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பல லட்சம் மக்கள் பலியாகி வருகின்றனர். மேலும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. வணிகத்தை தாண்டி பல்வேறு உலகளாவிய விளையாட்டு போட்டிகளும் ரத்தாகியுள்ளன.
உலக ஒலிம்பிக் போட்டி, விம்பிள்டன் டென்னிஸ், ஐபிஎல் என அனைத்து போட்டிகளும் ரத்தாகி உள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான பேட் கம்மின்ஸ் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்று விளையாட இருந்தார். இதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ரூ.15.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்பதே கேஎள்விக்குறியாகி உள்ளது.
போட்டிகள் எதுவும் இல்லாததால் பண்ணைகளை சுற்றி வரும் பேட் கம்மின்ஸ் விலங்குகளை பராமரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். பண்ணைகளில் பேட் கம்மின்ஸ் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.