ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது நாக் அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் நேற்று போட்டியை நடத்தும் ரஷ்யா, ஸ்பெயின் அணியை பெனால்ட்டி ஷூட் மூலம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடியது. இருப்பினும் 12 நிமிடத்திலேயே ஸ்பெயின் அணியின் செர்கய் தனது அணிக்கு ஒரு கோல்போட்டு முன்னிலைக்கு கொண்டு வந்தார். இந்த கோலுக்கு பதிலடியாக ரஷ்யாவின் ஏரியம் டியூபா என்பவர் அதிரடியாக ஒரு கோல் போட்டதால் முதல்பாதி ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்ட்டி ஷுட் மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பெனால்ட்டி ஷூட்டில் ரஷ்ய வீரர்கள் நான்கு கோல்கள் போட்டனர். ஆனால் ரஷ்ய கோல்கீப்பரின் அபார திறமையால் ஸ்பெயின் மூன்று கோல்கள் மட்டுமே போட்டதால் ரஷ்ய அணி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது