பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஷதாப் கான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஷதாப் கான் இப்பொது அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் டிவிட்டரில் ரசிகர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசியபோது ரசிகர் ஒருவர் நீங்கள் பந்துவீச மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்று யாரை கூறுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷதாப் கான் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா மற்றும் ஆஸியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆகியோரைதான் கூறுவேன் எனப் பதிலளித்துள்ளார்.