இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக முதல் உலகக் கோப்பை ( 1983)வென்று கொடுத்த கபில்தேவிற்குப் பிறகு முன்னாள் கேப்டன் கங்குலியை சிறந்த கேப்டன் என எல்லோரு அழைத்து வந்தனர். அதன்பிறகு மூன்று வகையான உலகக் கோப்பைகளையும் வென்று கொடுத்த தோனியை சிறந்த கேப்டன் என்று அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் கங்குலியை விட தோனி சிறந்த கேப்டன் என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஊழல் சிக்கிய கடந்த 1996 அம் ஆண்டுக்குப் பிறகு, கங்குலி 1996 ஆம் ஆண்டு கேப்டனாகப் பொறுப்பேற்றார்.
அவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைப் பதிவு செய்து சாதித்தது.
அதன்பிறகு தோனி இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். இவரது தலைமையில் இந்தியா டி-20, 50 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.
இதுகுறித்து முன்னாள் காம்பீர் கூறும்போது, சவுரங் கங்குலியை விட எம்.எஸ்.தோனியே சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார்.
காம்பீர் தற்போது டெல்லி தொகுதியில் எம்பியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.