Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கங்குலி ஆலோசனைக்கு செவி கொடுத்த கோஹ்லி

கங்குலி ஆலோசனைக்கு செவி கொடுத்த கோஹ்லி
, சனி, 8 செப்டம்பர் 2018 (14:52 IST)
அஸ்வினுக்கு பதில் ஜடேஜாவை பயன்படுத்தலாம் என்று கங்குலி கூறியதை தொடர்ந்து வேண்டும் 5வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகள் விழ்த்தி அசத்தியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் தோல்வி அடைந்து தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது.
 
நேற்று 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது.
 
5வது போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வின் நீக்கப்பட்டு ஹனுமா விகாரி மற்றும் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளனர். ஜடேஜா நேற்று இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
 
இந்திய அணி 4வது போட்டியில் தோல்வி அடைந்து தொடரை இழந்தபோது பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர். 4வது டெஸ்ட் போட்டியில் மொயின் அலி குறிப்பாக பந்துவீச்சில் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 
 
இந்திய அணி 4வது போட்டி தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-
 
மொயின் அலி, அஸ்வினை விட சிறந்த பந்துவீச்சாளர் இல்லை. ஆனால் கடினமான தளத்தை பயன்படுத்துகிறார். சுழற்பந்து வீச்சாளர்கள் சில நேரங்களில் கடினமான தளத்தை பயன்படுத்த வேண்டும். நான் அப்போது கும்ளேவுக்கு பதில் சில நேரங்களில் ஹர்பஜனை பயன்படுத்துவேன். 
 
அதுபோன்று அடேஜாவை பயன்படுத்தலாம். ஆனால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு இந்த சூழலில் தேவையில்லை. அஸ்வின் பந்தை வைத்து என்ன சோதனை செய்கிறார் என்று விராட் கோஹ்லி அவரிடம் பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ஓய்வு: ரபேல் நடால்