இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை பிசிசிஐ அவமதிப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ இந்திய வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தத்தை சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது. அதில் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தனர். அதிகபட்ச சம்பளமாக 7 கோடி ரூபாய் பெரும் ஏ+ பிரிவில் கோலி, பூம்ரா மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.
இதில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் வாஹ்ன் இது ஜடேஜாவை அவமதிப்பதாகும். கோலியின் வெற்றிகளுக்கு பின்னால் ஜடேஜா இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.