தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று சுமார் 20 சதவீத திரையரங்குகள் மட்டுமே திறக்கப் பட்டுள்ளன. மேலும் சில திரையரங்குகள் திறப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கும் அனுமதி அளித்தால்தான் பெரிய படங்கள் ரிலிஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் நவம்பர் இறுதி வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளதாம். இந்த அறிவிப்பால் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.