கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முன் விஜயவாடா, ராஜமந்திரி போன்ற போன்ற இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் 20 பேர் சாப்பிடுவதற்கே வழியில்லாததால் லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் பணமின்றி தவித்து வரும் இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு கூட செல்லமுடியாமால் தவித்து வருவதாக கூறியுள்ளனர். பின்னர் உடனடியாக அடுத்த 15 நாட்களுக்கு தேவையான உணவிற்கு உதவி செய்து கொடுத்த ராகவா லாரன்ஸ் அடுத்தகட்ட நடவடிக்கையாக அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அதில், வறுமையில் வாடும் இந்த ஏழை எளிய மக்கள் 20 பெரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து உதவியை செய்து தர வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உதவி எங்கு கேட்டால் உடனடியாக கிடைக்கும் என தெரிந்துகொண்ட அந்த மக்கள் லாரன்ஸின் வீட்டின் முன்பு கூடி உதவி கேட்டுள்ள இந்த செய்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் லாரன்ஸின் இந்த சேவையை பலரும் பாராட்டியுள்ளனர்.