Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப முதல்வரின் முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப முதல்வரின் முக்கிய அறிவிப்பு
, வியாழன், 30 ஏப்ரல் 2020 (14:32 IST)
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதும் உலகம் முழுவதும் சர்வதேச போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனால் தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வேலை, படிப்பு, தொழில் ஆகியவற்றின் காரணமாக வெளிநாடு சென்றவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தற்போது வெளிநாட்டில் சிக்கி இருக்கும் தமிழர்கள் உள்பட அனைவரையும் இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் உடனடியாக https://nonresidenttamil.org/home என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இந்த இணையதளத்தை வெளிநாட்டில் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடை அடுத்து கொரோனா இல்லா மாவட்டம் இதுதான்