இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார்.
அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளார். இந்த படம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தை முடித்த பின்னர் முருகதாஸ் அடுத்து சல்மான் கான் நடிப்பில் ஒரு படத்தை உருவாக்க உள்ளார்.
இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிடே என்ற பாலிவுட் படத்தை அக்ஷய் குமாரை வைத்து முருகதாஸ் இயக்கி இருந்தார். அதன் பின்னர் இப்போது சல்மான் கானோடு இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.