பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் கேப் கிடைக்கும்போதெல்லாம் தனது சொந்த கருத்துக்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை சாமர்த்தியமாக திணித்து விடுவார் என்பது கடந்த மூன்று சீசன்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று போன் மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் நேரம் வந்தபோது போனில் அழைத்த நபர் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக கமல்ஹாசனிடம் ஒரு நச் கேள்வியை கேட்டார். செந்தில் போல் கவுண்டமணியுடன் எப்போதும் சேர்ந்து இருப்பீர்களா? அல்லது வடிவேல் போல் தனியாக இருப்பீர்களா? என்பதுதான் போன் அழைப்பாளரிடம் இருந்து வந்த கேள்வி. இந்த கேள்வி கமல்ஹாசன் தனது அரசியல் நிலையில் தனித்து செயல்படுவாரா? அல்லது கூட்டணி வைத்து செயல்படுவாரா? என்பதை மறைமுகமாக கேட்டது போல் இருந்தது. இந்த கேள்வியால் கமல்ஹாசன் சற்றே அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சமாளித்து பதில் சொல்கிறார். அவர் என்ன பதில் சொல்கிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்
மக்களவை தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பின் கிட்டத்தட்ட அரசியலில் இருந்தே கமல்ஹாசன் ஒதுங்கிவிட்டதாகவே தெரிகிறது. நடைபெறவிருக்கும் வேலூர் மக்களவை தேர்தலில் கூட அவரது கட்சி போட்டியிடவில்லை. தமிழக அரசியலில் தனித்து போட்டியிட்டால் அரசியல் செய்ய முடியாது என்பதை நன்றாக புரிந்து கொண்ட கமல்ஹாசனிடம் சரியான நேரத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியாக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியாக கருதப்படுகிறது