Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பாஜகவுக்கு மாற்று ஆம் ஆத்மி கட்சி தான்- அரவிந்த் கெஜ்ரிவால்

பாஜகவுக்கு  மாற்று ஆம் ஆத்மி கட்சி தான்- அரவிந்த் கெஜ்ரிவால்
, வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:45 IST)
பாஜவுக்கு மாற்று நாங்கள்தான் என ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பின், 2019 ஆம் ஆண்டும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை வென்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

பாஜகவின் கொள்கை மற்றும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், நாட்டிலுள்ள பல மா நிலங்களில் பாஜகவின் ஆட்சி தான் நடக்கிறது.

பாஜகவுக்கு அடிபணியாதவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை விட்டு பயமுறுத்துவதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்,  சமீபத்தில்  மதுபான உரிமம் வழங்கதில் முறைகேடு  தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியா மீது சிபியை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கூறி வரும் நிலையில்  டெல்லியில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் தீர்மானத்தை  அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார்.  தற்போது டெல்லி சட்டசபையில், 70 இடங்களில் 62 ல் ஆம் ஆத்மி உள்ளனர்.  பாஜவுக்கு 8 எம் எல் ஏக்கள் உள்ளனர். நேற்று இந்த தீர்மானத்தின் போது,  நடந்த விவாதத்தில் பாஜவினர் வெளி நடப்பு செய்தனர்.

இதுகுறித்து   கெஜ்ரிவால், தேசிய கட்சிகளான ஊழல் செய்யும் பாஜக மற்றும்  நேர்மையான கட்சி ஆம் ஆத்மியும் தான் உள்ளன.  பாஜவுக்கு போட்டியாக  ஆம் ஆத்மிதான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மாவீரன்’ படப்பிடிப்பில் இணைந்த அதிதி ஷங்கர்: முதல் காட்சியே ரொமான்ஸ்!