அமேசான் ஓடிடி தளம் மூலம் கிடைக்கும் 100 கோடி, சாட்டிலைட் விற்பனை, வெளிநாட்டு உரிமை விற்பனை, ஹிந்தி டப்பிங் உரிமை என அனைத்தையும் சேர்த்தால் ரூபாய் 200 கோடி வரை வர வாய்ப்பிருப்பதாகவும் இந்த கொரோனா நேரத்தில் இதை விட்டால் வேறு வழியில்லை என்றும் ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் யோசிப்பதாகவும் கூறப்பட்டது.
மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாகவும், கொரொனா காலம் எத்தனை நாட்கள் நீண்டாளும் மாஸ்டர் திரைப்படம்
தியேட்டரில் தான் வெளியாகும் என பல்வேறு தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று சமூக வலைதளங்கில் ஒரு போஸ்டர் வெளியாகிறது. அதில், நவம்பர் 14ஆம் தேதி அமேசான் பிரைமில், மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். தற்போது மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்பவர் மாஸ்டர் திரையரங்கில் தான் வெளியாகும் என்று மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அதாவது கொண்டாட்டம் காத்திருக்கிறது என தெரிவித்து, விஜய் ரசிகர்களின் குழப்பத்தைத் தீர்த்துள்ளார்.