சம்பளத்திலும் சரி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிலும் சரி ரஜினியை விஜய் முந்துவது என்பது யாருக்கும் ஆச்சரியத்தை தர வாய்ப்பில்லை. ஏனெனில் விஜய்யின் படங்கள் இன்று மிகப்பெரிய ஹிட்டாகி வருகிறது என்பதும், ரஜினியின் சம்பளத்தை அவர் நெருங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஜினியை ராகவா லாரன்ஸ் முந்தியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக காலையில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பிஏஆர்சி இந்தியா அமைப்பு இந்த தகவலை மறுத்துள்ளது.
இந்த கொரோனா விடுமுறையில் அகில இந்திய அளவில் எந்த நடிகரின் திரைப்படங்களை பொதுமக்கள் அதிகம் பார்த்துள்ளனர் என்பது குறித்த ஒரு கருத்துக்கணிப்பை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் நடிகர் விஜய்யின் படத்தை 117.9 மில்லியன் பேர்கள் பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய்யின் திரைப்படம் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் அந்த வாரத்தின் டி.ஆர்.பி ரேட் அந்த தொலைக்காட்சிக்கு எகிறுகிறது என்பதாக இந்த செய்தியை இந்தியாவில் உள்ள எல்லா செய்திசேனல்களும் மீடியாக்களும் கவர் செய்தனர்.
இந்த நிலையில், பிஏஆர்சி இந்தியா அமைப்பு இந்த தகவல் தங்களுடைய அதிகாரபூர்வ தளத்தில் இருந்து வெளியாகவில்லை எனவும் இது தங்களுடைய லோகோவை யரோ தவறுதலாகக் கையாண்டு இந்த வேலையை செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இந்த அமைப்பின் அதிகாரி கிரிஸ் ஜோகர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.