தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அறிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
தொடர்ந்து உடல் நிலை சரிசெய்துகொண்டே படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தின் டப்பிங்கை சமீபத்தில் முடித்தார். டப்பிங் பேசும் போட்டோவை பதிவிட்டு இந்த பைத்தியக்காரத்தனம், துக்கம் மற்றும் உலகத்தில் இழந்துவிட்ட அனைத்தையும் சரி செய்வது என் கலை. இது எனக்கு சிறந்த சிகிச்சை.” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து இப்போது பொதுவெளியில் கலந்துகொண்டு வரும் சமந்தா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.