தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம்வந்த தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். அவர் இப்போது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.
வேறு படங்கள் எதையும் ஒத்துக்கொள்ளாமல் சமந்தா ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்று மையோசிட்டிஸ் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குஷி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா பேசும்போது “உங்கள் அன்புக்கு நன்றி. நான் முழு ஆரோக்யத்தோடு திரும்பி வந்து ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தைக் கொடுப்பேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்காக இதை நான் செய்வேன்” எனக் கூறியுள்ளார்.