அஜித் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக அதிதி ராவ் ஹையாத்ரி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் திரைக்கதை பணிகள் மற்றும் செட் அமைக்கும் பணிகள் தாமதத்தால் தள்ளி வைக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால், நாகார்ஜுனா ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது கதாநாயகியாக நடிக்க, அதிதி ராவ் ஹையாத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் ஒரு சிறிய போர்ஷன் கிராமத்துப் பின்னணியில் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.