Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தமிழக மக்களின் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்: விஜய்யை அடுத்து விஷாலும் கண்டனம்..!

தமிழக மக்களின் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்:  விஜய்யை அடுத்து விஷாலும் கண்டனம்..!

Siva

, வியாழன், 20 ஜூன் 2024 (15:07 IST)
மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன் என நடிகர் விஷால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில்  விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.
 
சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்." 
 
என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன்.
 
இவ்வாறு நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் #SDGM படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது!!