பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜுடன் மீண்டும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிப்ரவரி இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முன்னதாக ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருந்ததால் அண்ணாத்த கடைசி படமாக இருக்கும் என பேசிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ரஜினி இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.