நாளை ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாக இருப்பதாக பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து அந்த அறிவிப்பு அஜித்தின் அடுத்த படமாக தான் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பல முன்னணி தெலுங்கு திரைப்பட நடிகர்களின் படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் நாளை காலை 9.09 மணிக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனம் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அனேகமாக அஜித் 63 பட அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
ஏற்கனவே அஜித் 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும், அஜித் ஜோடியாக தபு நடிக்க இருப்பதாகவும், வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல்கள் எல்லாம் நாளைய அறிவிப்பில் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.