பிரபல நடிகரான அஜித் சினிமாவை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல், புகைப்படம் என பல்துறை கலைஞராக உள்ளார். அந்தவகையில் சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமைத்துள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இக்குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானங்கள் அதிக நேரங்கள் பறந்து ஏற்கனவே சாதனை படைந்திருந்தன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் - 2018 போட்டியில் கலந்து கொண்ட தக்ஷா குழுவினர் சர்வதேச அளவில் இரண்டாம் பிடித்து சாதித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற தக்ஷா குழு ட்ரோன் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஒரு ஹீரோவாக படத்தில் நடிப்பதோடு நிறுத்தி விடாமல் இளம் தலைமுறையை பயனுள்ள விஷயத்தில் ஈடுபட வைக்கும் அஜித்தின் இந்த செயலை பலரும் பாராட்டிவருகின்றனர்.