அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் லைகா நிறுவனத்தின் பொருளாதார காரணங்களால் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஜூனில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மே 10 ஆம் தேத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அறிவிக்கப்ப்பட்டதற்கு ஒரு நாள் முன்பாகவே மே 9 ஆம் தேதி எளிமையான பூஜையோடு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இரண்டு நாட்கள் மட்டும் நடக்கும் படப்பிடிப்பு ஆந்திராவில் தேர்தல் முடிந்ததும் முழு வீச்சில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் அஜித் தோன்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு தோற்றம் அஜித்தின் இளமைக் கால தோற்றத்தை நினைவு படுத்தும் விதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதற்கான லுக் வடிவமைப்பை சமீபத்தில் படக்குழு வடிவமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.