அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் அடுத்தப் படமும் ரீமேக்தான் என்றும் அதனை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜித் நடிப்பில் தற்போது பிங்க் படத்த்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். அதனை சதுரங்கவேட்டை, தீரன் ஆகியப் படங்களின் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வருகிறார். குறைந்த நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்து அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அஜித்தின் அடுத்தப் படத்தையும் ஹெச் வினோத்தே இயக்க இருப்பதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் இந்தப் படத்தை முடித்தவுடன் உடனே அடுத்தப் படத்தை துவங்கும் நிலையில் வினோத்திடம் இருக்கும் திரைக்கதை இல்லையாம். அதனால் தனக்கு சிறிது அவகாசம் தேவை என அவர் கூறியிருக்கிறார். அதனால் அந்த இடைப்பட்ட காலத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அதற்காக தயாரிப்பாளர் போனி கபூரிடம் இருக்கும் ஹெப்டா த லாஸ்ட் லெக்சர் எனும் எகிப்து மொழிப் படத்தின் கதையில் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படததை அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிவா இயக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் படத்தை முடித்த பின்பே அஜித் மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் அடுத்தப் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.