அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டான வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்களின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளார்.
அஜித்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்களாக அமைந்தவை வாலி மற்றும் வரலாறு என்றால் அது மிகையாகாது. இந்த இரு படங்களையும் இந்தியில் ரீமேக் செய்ய விரும்பி அஜித்தின் நண்பரும் தயாரிப்பாளருமான போனி கபூர் அதன் உரிமைகளை வாங்கியுள்ளார்.
அதில் வாலி படத்தில் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த போவதாக சொல்லப்படுகிறது. மேலும் வரலாறு படத்தில் அஜித்தையே நடிக்க வைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் அஜித் இந்தியில் நாயகனாக அறிமுகம் ஆகும் முதல் படமாக அந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.