நடிகர் அஜ்மல் நெற்றிக்கண் படத்துக்குப் பின்னர் பிஸியாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.
நடிகர் அஜ்மலை இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அவர் நடித்த கோ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழை ஈட்டித்தந்தது. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறாததால் வாய்ப்புகள் குறைந்தன.
இதையடுத்து இப்போது அவர் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் அவர் நடிக்க உள்ளார்.
இதையடுத்து இப்போது அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் மலையாளத்தில் பிருத்விராஜை வைத்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் கோல்ட் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.