நடிகர் ஆனந்தராஜ் தான் ஏன் ஒரு மணிரத்னம் படத்தில் கூட நடிக்க முடியவில்லை என்பது குறித்து டூரிங் டாக்கீஸ் இணையதள சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உருவாக்கிய மிகச் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ். 90 களில் வில்லனாக அச்சமூட்டியவர் 2000களுக்குப் பிறகு ரூட்டை மாற்றிக்கொண்டு இப்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களின் படங்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் எல்லாம் இவர் நடித்துள்ளார். ஆனால் இயக்குனர் மணிரத்னம் படத்தில் மட்டும் நடித்ததே இல்லை.
இது குறித்து அவர் சமீபத்தில் டூரிங் டாக்கிஸ் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் பகல் கனவு படத்தில் முரளியோடு சில காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் முரளி கருப்பு நான் வெள்ளை என்பதால் கேமரா மென் வேண்டாம் என சொல்லிவிட்டார். பின்னர் ஒரு போலீஸ் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒருமுறை போலிசாக நடித்துவிட்டால் அதற்கு பின்னர் வேறு நல்ல பாத்திரங்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் நான் மறுத்துவிட்டேன். அதன் பின் அவர் படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.