Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 படத்துக்காக அனிருத் குரலில் பதிவான பாடல்!

இந்தியன் 2 படத்துக்காக அனிருத் குரலில் பதிவான பாடல்!

vinoth

, திங்கள், 11 மார்ச் 2024 (07:30 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகள்  5 மணிநேரத்துக்கு மேல் வந்ததால் இப்போது படத்தை இரண்டு பாகங்களாக பிரித்துள்ளனர். முதலில் இந்தியன் 3 படம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நாளில் இந்தியன் 3 திரைப்படம் பற்றி கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள பல ஹவுசிங் போர்ட் குடியிருப்புகளில் ஒரு பாடல் ஒன்றை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். இதில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பாடலை அனிருத்தே தனது குரலில் பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் இருக்கிறதா கங்குவா ஷூட்டிங்?... இயக்குனர் சிவாவின் புது ஐடியா!