தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர்களில் ஒருவர். அதன் பின்னர் அவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், மண் வாசனை, கருத்தம்மா போன்ற திரைப்படங்கள் இன்றளவும் கல்ட் கிளாசிக் படங்களாக அமைந்துள்ளன.
பாரதிராஜா தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். கடைசியாக அவர் மீண்டும் முதல் மரியாதை என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்னர் இயக்கத்துக்கு ஒரு இடைவெளி விட்டுவிட்டு இப்போது நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார். பாரதிராஜா நடிப்பில் கள்வன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் லிங்குசாமி “விரைவில் பாரதிராஜாவின் பயோபிக் உருவாகும். அதில் தமிழ் சினிமாவின் அனைத்து கதாநாயகிகளும் வருவார்கள்” எனக் கூறியுள்ளார்.