தமிழகத்தில் நீண்ட மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ரீ ரிலீஸாக பிகில் படம் வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா காலமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதனிடையே திரைப்பட தயாரிப்பாளர்களோடு திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட விபிஎஃப் கட்டணம் தொடர்பான விவகாரத்தால் புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னதாக வெளியான சில படங்களை ரீ ரிலீஸ் செய்ய திரையரங்குகள் முடிவு செய்துள்ளன. இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் பரவலாக எதிர்பார்த்த நிலையில் மாஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக பிகில் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே படங்களையும் பெரும்பாலான திரையரங்குகள் திரையிட்டுள்ளன. இதுதவிர தெலுங்கில் வெளியான அல வைகுந்தபுரம், பீஷ்மா உள்ளிட்ட படங்களும் திரையிடப்படுகின்றன.