Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கங்குவா படத்தில் நடிப்பதை உறுதி செய்த பாலிவுட் நடிகர் பாபி தியோல்!

கங்குவா படத்தில் நடிப்பதை உறுதி செய்த பாலிவுட் நடிகர் பாபி தியோல்!
, சனி, 9 டிசம்பர் 2023 (07:59 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இறுதிகட்ட காட்சிகளை இயக்குனர் சிவா படமாக்கி வருகிறார். இதையடுத்து படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக் கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்து வருகிறார். சமிபத்தில் அவர் நடித்த அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் கங்குவா படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ள அவர் “ சூர்யா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர்.  அவருடன் இணைந்து நடித்தது சிறப்பான் அனுபவம்.  இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வழக்கமாக நான் நடிக்கும் கதாபாத்திரங்களில் இருந்து வேறுபட்டது. என்னால் இரண்டு மாதத்தில் தமிழைக் கற்றுக் கொள்ளமுடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் தயாரிக்கும் ஃபைட் கிளப் படத்தின் முதல் பாடல் வெளியீடு