Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரமுகி 2 வில் இவர்தான் கதாநாயகியா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சந்திரமுகி 2 வில் இவர்தான் கதாநாயகியா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, வியாழன், 21 ஜூலை 2022 (15:48 IST)
சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் வேலைகள் தூசு தட்டப்பட்டுள்ளன. திரைக்கதை வேலைகளை இயக்குனர் பி வாசு தொடங்க அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. படத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் மைசூரில் தொடங்கி நடந்துவருகிறது.

ஆனால் இதுவரை படத்தின் ஹீரோயின் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தில் லஷ்மி மேனன்தான் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக லஷ்மி மேனன் தமிழ் படங்களில் அதிகளவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“தலை வணங்குகிறேன்… பெருமையாக உள்ளது”… உதயநிதி பாராட்டிய இன்னும் ரிலீஸ் ஆகாத திரைப்படம்!