தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது
ஆனால் சூரரைப்போற்று படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தது
இது குறித்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் இரு தரப்பு வாதங்களையும் சென்னை நீதிமன்றம் கேட்டறிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இதன்படி சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்தை தயாரிக்கலாம் என்றும் அந்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது தாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்தின் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது