ஜப்பானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகரான கென் ஷிமுரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 34,000 ஐ தாண்டியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் சாமான்யர்கள் மட்டுமில்லாது சினிமா பிரபலங்கள், அரச குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரிசையில் ஜப்பானைச் சேர்ந்த சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரான கென் ஷிமுராவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது மார்ச் 20 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கொரோனாவோடு இணைந்து நிமோனியாவும் இருந்ததால் சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
70 வயதாகும் கென் ஷிமுரா ‘தி ட்ரிஃப்டர்ஸ்’ எனப்படும் ராக்பேண்ட் குழுவிலும், ‘பாஹா டொனோஸாமா’ மற்றும் ‘ஹென்னா ஓஜிஸான்’ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அவர் ஜப்பானில் தனது நகைச்சுவைகளின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.