போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் நடிகை ரகுல் ப்ரித் சிங் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டதற்கு செய்தி சேனல்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி அதன் பின்னர் திடீரென போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். மும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்ததை அடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நடிகை ரகுல்ப்ரித் சிங்கின் பெயரை கூறியதாக சில செய்தி சேனல்களும் இணையதளங்களும் செய்தி வெளியிட்டன.
இது சம்மந்தமாக ரகுல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் ரியா எந்தவொரு விசாரணையிலும் தனது பெயரை சொல்ல வில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து நீதிமன்றம் 3 செய்தி சேனல்கள் ரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்புக் கேட்டு ஒளிபரப்ப வேண்டும் எனக் கூறியுள்ளது. அந்த மூன்று சேனல்கள் ஜீ நியூஸ், ஜீ 24, ஜீ ஹிந்துஸ்தானி ஆகிய சேனல்கள் ஆகும். மேலும் பல இணையதளங்களில் ரகுலின் பெயருக்கு இழிவு செய்யும் படி உள்ள செய்திகளை நீக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.