இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தனுஷ் 50 ஆவது படத்தின் வேலைகளுக்கு நடுவே கேப்டன் மில்லர் படத்தின் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை இரண்டே நாட்களில் தனுஷ் பேசி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.