நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் தண்டிக்கப்படுவது அவரது பணபலத்தையும், வாதாடும் வழக்கறிஞரையும் பொருத்தே அமையும் என பிரபல இயக்குநர் ஜாய் மேத்யூ தெரிவித்துள்ளார்.
நடிகை வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் திலீப்புக்கு பணபலமும் அரசியல் வட்டாரத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆளும் கட்சி ஆதரவு அதிக அளவில் உள்ளது. மீடியாக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவே திலீப் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் ஜாய் மேத்யூ கூறியதாவது:-
நடிகர் திலீப் மீதான கடத்தல் வழக்கின் இறுதி முடிவு அவரது பணபலத்தையும், வாதாடும் வழக்கறிஞர்களையும் பொருத்தே அமையும். நடிகை கடத்தல் வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார் என்ற நம்பிக்கை முதல்வர் மீது இருந்தது. ஆனால் எப்போது அவர் நடிகை கடத்தலில் எந்த சதியும் இல்லை என்று கூறினாரோ அப்போதே அவர் மீதான எனது நம்பிக்கை குறைந்துவிட்டது.
நடிகை
கடத்தல் குறித்த விவகாரத்தை ஊடகங்கள்தான் உயிருடன் வைத்திருந்தன என நான் கருதுகிறேன். நம் நாட்டின் 4வது தூணான செய்தி மற்றும் ஊடகங்களின் சக்தியை இப்போதுதான் நாம் காண்கிறோம் என்றார்.