தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அரசியல் கதைக்களம் கொண்ட படமாக நடித்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் ஈர்த்தது. அரசியல் கதைக்களத்தை நகைச்சுவை ஜானரில் படம் சொல்ல வருகிறது என்பது டிரைலரின் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் சராசரிக்கும் கீழான மேக்கிங் நிறைந்த காட்சிகளாக உள்ளது. வழக்கமாக தமிழ் சினிமா கதாநாயகர்கள் செய்யும் கோணங்கி தனமான உடல்மொழியை அமீர் வெளிப்படுத்தி இருப்பது டிரைலரின் குறையாக காணப்படுகிறது. இந்நிலையில் படம் மே 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.