இயக்குனர் கதிர் இயக்கிய இதயம், காதலர் தினம் மற்றும் காதல் தேசம் ஆகிய படங்கள் 90களில் இளைஞர்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் காதல் வைரஸ் திரைப்படம் தோற்றதை அடுத்து அவரால் தொடர்ந்து படங்கள் இயக்க முடியவில்லை.
இடையில் ஸ்ரீகாந்த் நடிப்பில் கோடை விடுமுறை என்ற படத்தை இயக்க இருந்தார். அந்த படத்தின் பூஜை கூட நடந்தது. ஆனால் அடுத்த கட்டத்தை நோக்கி அந்த படம் செல்லவில்லை.
இதையடுத்து இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. அந்த படத்தில் கதாநாயகியாக லவ் டுடே புகழ் இவானா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் முக்கிய வேடத்தில் இயக்குனர் கதிரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதிரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.