Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படம் தாமதம் ஏன்? வெளியான தகவல்!

நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படம் தாமதம் ஏன்? வெளியான தகவல்!
, திங்கள், 25 செப்டம்பர் 2023 (18:41 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ஏழு மலை ஏழு கடல் என்ற படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

ஆனால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் படத்தின் தாமதத்துக்கு கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியாததே காரணம் என சொல்லப்படுகிறது. படத்தில் சுமார் 105 நிமிடக் காட்சிகளில் கிராபிக்ஸ் மற்றும் வி எஃப் எக்ஸ் பணிகள் தேவைபடுகின்றனவாம்.

அதற்கான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த மாதம் முழுப் பணிகளும் முடியும் எனவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1000 கோடி வசூலை தொட்ட ஜவான்… இயக்குனர் அட்லி படைத்த சாதனை!