தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அனைத்து மொழிகளிலும் பரீட்சியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.
இப்போது அவர் நடிப்பில் கிங் ஆஃப் கோதா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் அவரின் தந்தை மம்மூட்டியின் எந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் “எந்த படத்தையும் ரீமேக் செய்யமாட்டேன். கிளாசிக் படங்களை தொடாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதுதான் என் எண்ணம்” எனக் கூறியுள்ளார்.