சேவை வரி செலுத்தாத வழக்கில் நடிகர் விஷாலுக்கு எழும்பூர் பொருளாதார குற்றபிரிவு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஷால் ரூ. 1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர். பல முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகததால் நடிகர் விஷால் மீது சேவை வரித்துறையினர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் நேரில் ஆஜராகினார்.
மேலும், இந்த வழக்கு குறித்த கேள்விகள் கேட்க வரும் 26-ம் தேதி நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார். ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார்.