Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பிரபல நகைக் கடை திடீர் மூடல் ...சுமார் 100 கோடிக்கு மேல் வரை மோசடி ?

Trichy
, செவ்வாய், 17 அக்டோபர் 2023 (20:18 IST)
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல நகைக் கடை திடீர் மூடல் - ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை முதலீடு செய்த பொதுமக்கள் திருச்சி கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
 
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோயில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 9 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி என்கிற நகை கடை செயல்பட்டு வந்தது. 0% செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என  கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்த பலரும் முதலில் லட்சங்களில் முதலீடு செய்தனர்.
 
மாதம் குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் 10 மாத முடிவில் போனஸ் தொகையுடன் வரும் தொகையை கொண்டு செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்கலாம். அதே போல குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்தால் ஒரு வருடம் கழித்து அதற்கான வட்டியுடன் சேர்த்து செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்கலாம், பழைய நகைகளை மாற்றுவதற்கு நகைகளை கொடுத்தால் அதற்கு பத்திரம் போட்டு தருவார்கள் பத்து மாதம் கழித்து பழைய நகைக்கு மாற்றான புதிய நகைகளை வாங்கலாம் இவ்வாறு பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஏராளமான மக்கள் அந்த கடையில் முதலீடு செய்துள்ளனர். மூன்றாண்டுகளாக செயல்பட்டு வரும் அந்த கடையில் முதல் இரண்டு ஆண்டுகள் அவர்கள் அறிவித்தப்படியே நகைகள் தந்துள்ளனர். ஆனால் சென்ற வாரம் நகை சீட்டு முடிந்தவர்கள் கடைக்கு சென்று கேட்ட போது ஒரு வாரம், ஒரு மாதம் கழித்து வாருங்கள் என கூறி அனுப்பி உள்ளனர். சிலருக்கு  காசோலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணமில்லாத காரணதால் திரும்பி வந்தது.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
 
இதனிடையே திருச்சி கடை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள்   நேற்று மாலை வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள பிரணவ் ஜீவல்லரி கடையில் சென்று கேட்ட போது சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் இன்று காலை அவர்கள் வந்து பார்த்த போது கடை மூடப்பட்டிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்து இது குறித்து மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர். 
 
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் சுமார் 100 கோடி மேல் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'லியோ' படத்திற்கு தியேட்டரில் பேனர் வைக்கக் கூடாது- நீதிமன்றம் உத்தரவு