இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'உலக நாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டார். சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு, கிங்ஸ்டன் படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார்.
முழுக்க முழுக்க கடல் சார்ந்த அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாக கிங்ஸ்டன் உருவாகி வருவதாக சொல்லப்பட்டது. இந்த படத்தை ஜி வி பிரகாஷோடு இணைந்து ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.