Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஏ ஆர் ரஹ்மான் – விஜய் சேதுபதி கூட்டணியில் முதல் சைலண்ட் படம்! – சர்வதேச திரைப்பட விழாவில் ”காந்தி டாக்ஸ்”!

Gandhi Talks
, வியாழன், 23 நவம்பர் 2023 (10:50 IST)
Silence Roars: 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் 54வது IFFI கோவா காலா பிரீமியர்ஸில் முதல் சைலண்ட் படமாக ப்ரீமியர் செய்யப்பட்டதை அடுத்து இந்தப் பட அனுபவங்களை படத்தின் நடிகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்!


 
கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஜீ ஸ்டுடியோவின் 'காந்தி டாக்ஸ்' படம் நவம்பர் 21ஆம் தேதி கோவா 54வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் திரையிடப்பட்ட முதல் சைலண்ட் மூவி என்ற பெருமையைப் பெற்றது. விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சுவாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். கோவா 54வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் திரையிடப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம், சினிமா மீது ஜீ ஸ்டுடியோஸூக்கு உள்ள அர்ப்பணிப்பை எடுத்து காட்டுவதாகவும் உள்ளது.

கோவாவின் இந்தத் திரைப்பட விழாவில் 'காந்தி டாக்ஸ்' திரையிடப்பட்டது குறித்தும், தனது ஒலிப்பதிவு அனுபவம் குறித்தும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது , "இசையமைப்பாளராக இந்தத் திரைப்படம் எனக்குக் கிடைத்த பரிசு. இந்தப் படத்தில் எனக்கான கிரியேட்டிவ் வேலையை அங்கீகரித்து, எனக்கான சுதந்திரத்தை கிஷோர் அளித்தார். இந்தப் படத்தில் நான் விரும்பி, ரசித்து வேலை செய்தேன். தேவைப்படும் போதெல்லாம் இசையை ஆக்கப்பூர்வமாக மாற்றியமைத்தேன். இந்த படம் எனது ஷோரீல்" என்றார்.

படம் குறித்து விஜய் சேதுபதி, "இந்தக் கதை ஒரு கதாபாத்திரத்தின் நீதி தேடுவதில் இருந்து 'காந்தி'யை கண்டுபிடிப்பது வரையிலான பரிணாமத்தைக் காட்டுகிறது. இது எங்களுக்கு சவாலான படமாக இருந்தது. கிஷோர் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் கொண்டு வர என்னால் முடிந்த ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். மதம், மொழி போன்றத் தடைகளைத் தாண்டிய விஷயமாக இந்தப் படம் அமைந்ததால் இதை நான் தேர்ந்தெடுத்தேன் மற்றும் ஒரு நடிகராக நான் எனது பாத்திரத்திற்கு என நடிப்பால் நியாயம் சேர்க்க முயன்றிருக்கிறேன்” எனக் கூறினார்.

 ஷாரிக் படேல், CBO Zee Studios பேசும்போது, ”உரையாடல்கள் இல்லாமல் ஒரு படத்தை உருவாக்குவது சவாலானதாக இருந்தது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற திறமைசாலிகள் காட்டிய ஈடுபாடுதான் இந்தப் படம் மெயின் ஸ்ட்ரீம் படமாக மாற முக்கியக் காரணம். ஐந்து மொழிகளில், தனித்துவமான பாடல்களுடன் உருவாகியுள்ள முதல் சைலண்ட் மூவி இதுதான். IFFI போன்ற நமது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் இந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு விரைவில் இந்தப் படத்தைக் காட்ட ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

 இயக்குநர் கிஷோர் பி பெலேகர் புனித் கோயங்கா மற்றும் ஷாரிக் படேலின் ஆதரவு குறித்து பகிர்ந்து கொண்டதாவது, "அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர். அவர்கள் இல்லாமல் இந்த படம் சாத்தியமில்லை" என்று கூறினார்.

2023 ஆம் ஆண்டில், ஜீ ஸ்டுடியோஸ் 'கடார் 2,' '12த் ஃபெயில்,' 'ஆத்மபாம்ப்லெட்,' மற்றும் 'வால்வி' ஆகியவற்றுடன் 'பெர்லின்,' 'கென்னடி,' மற்றும் 'ஜோராம்' போன்ற சர்வதேச பிரீமியர்களுடன் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்த வரிசையில் வர இருக்கும் ஆண்டில் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படமும் சேர இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசைஞானி எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன்! - டைரக்டர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டனர்!!