Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கௌதம் மேனனின் அடுத்த படத்தில் நயன்தாராவுக்கு பதில் இவரா? வெளியான தகவல்!

கௌதம் மேனனின் அடுத்த படத்தில் நயன்தாராவுக்கு பதில் இவரா? வெளியான தகவல்!

vinoth

, வியாழன், 13 ஜூன் 2024 (07:35 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. கடைசியாக அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் சிக்கலில் மாட்டித் தவிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர் விரைவில் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது.

ஆனால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“சாமானியன் படத்தை தயாரிப்பாளர் கொன்றுவிட்டார்… எனக்கு சம்பளமும் தரவில்லை” – ராமராஜன் ஆதங்கம்!